"நான்கூட டாக்டர் தான்".. மேட்ரிமோனியில் வலைவிரித்த இளைஞர்.. நம்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் தன்னை டாக்டர் எனக்கூறி பெண்ணை ஏமாற்றியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertising
>
Advertising

மேட்ரிமோனி

திருமணங்களில் எப்போதும் வரன் பார்ப்பது பல்வேறு சிக்கலான காரியமாகும். ஆனாலும், இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மேட்ரிமோனி மூலமாக எளிதில் தங்களுக்கு தேவையான வரன்களை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும்கூட திருமணம் என்பதே பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது தான். குறிப்பாக வரன் பற்றிய விசாரணையின் போது நடக்கும் களேபரங்கள். மேட்ரிமோனி தளங்களை சிலர் ஏமாற்று வேலைக்கும் பயன்படுத்தி வரத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், திருமணத்துக்கு வரன் பார்க்கும் நோக்கில் சமீபத்தில் தன்னுடைய விபரங்கள் மேட்ரிமோனி தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது, ஒரு இளைஞர் மேட்ரிமோனி தளத்தில் தன்னை டாக்டர் என அறிமுகம் செய்திருக்கிறார். இருவரும் நட்பாக பேசிவந்த நிலையில், இது காதலாக மாறியதாக தெரிகிறது.

காஸ்ட்லி கிஃப்ட்

இதனையடுத்து பெண் மருத்துவர் தன்னுடைய காதலனுக்கு அவ்வப்போது லட்சக்கணக்கில் பணம் அனுப்பி வந்திருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் ஐபோன் உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசுகளையும் அனுப்பியிருக்கிறார். ஆனாலும், நேரில் சந்திக்க வரும்படி அந்த பெண் அழைக்க ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறி வந்திருக்கிறார் அந்த இளைஞர். ஒருகட்டத்தில் அவர்மீது சந்தகேமடைந்த இளம்பெண் காவல்துறையில் இதுகுறித்து தனது உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அப்போது அவர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளிக்கும்படி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார் அந்த பெண். இதுவரையில் 12 லட்ச ரூபாயை அந்த இளைஞருக்கு அனுப்பியதாக பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

வலைவீச்சு

இந்நிலையில், மேட்ரிமோனியில் பல லட்சங்களை சுருட்டிய இளைஞரை பிடிக்க காவல்துறையினர் தொடர் தேடுதல் நடத்திவந்தனர். அதன் பலனாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் அவர் பெயர் கார்த்திக்ராஜ் என்பதும் அவர் பி.காம் படித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. அவரிடம்  இருந்து ரூ.98 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. வசதியான பெண்களை குறிவைத்து போலியான ப்ரொபைல் மூலமாக அவர்களை அணுகி, பணத்தை சுருட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

MATRIMONY, DOCTOR, FAKEPROFILE, மேட்ரிமோனி, டாக்டர், கைது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்