பக்காவான பிளான்.. 2.25 கோடி அபேஸ்.. ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்..சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் செயல்பட்டுவந்த தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து 2.25 கோடி ரூபாயை அந்த நிறுவனத்தின் பணியாளர்களே திட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertising
>
Advertising

தனியார் நிறுவனம்

சென்னையின் தாம்பரத்தை அடுத்து உள்ள குரோம்பேட்டையில் அமைந்து இருக்கிறது இந்த தனியார் நிறுவனம். இங்கே பணிபுரிந்து வந்த 4 பேர் சேர்ந்து 2.25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் சென்னையில் உள்ள மத்திய குற்றப் பிரிவில் புகார் கொடுத்து இருக்கிறார்.

விசாரணை

கடந்தாண்டு நவம்பர் 19 ஆம் தேதி விஜய குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அந்த நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்த கோவையைச் சேர்ந்த சந்தானகுமார், காசாளர் கார்த்திக், சேகர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் இந்த மோசடி வேலையை செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படும் நான்கு பேரையும் காவல்துறை அதிரடியாக கைது செய்து இருக்கிறது.

தாம்பரம் காவல் ஆணையரகம்

நிர்வாக காரணங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டன. இங்கே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நால்வரையும் கைது செய்திருக்கிறார்கள்.

நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த நான்கு பேரையும் சிறையில் அடைத்து இருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். சென்னையில் 2.25 கோடி மோசடி செய்த கும்பலை காவல்துறை கைது செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

TAMILNADU, CHENNAI, தாம்பரம், சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்