வீட்டுக்குள் கேட்ட பயங்கர சத்தம்... சென்னையில் நடந்த Money heist.. ரைடு விட்ட சென்னை போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட முயற்சித்த கும்பலை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது.
நஷ்டம்
சென்னையை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்திருக்கிறார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அதே பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்துவந்த போது தனது நண்பரான ரசூல் என்பவரிடத்தில் தனது கஷ்டத்தினை கூறியிருக்கிறார். அப்போது ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என யுவராஜிடம் கூறியுள்ளார் ரசூல். மேலும், 11 லட்சம் கொடுத்தால் 60 லட்சம் ரூபாய் தருவதாகவும் ரசூல் சொல்ல, அதனை நம்பி யுவராஜ் 11 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
தனி வீடு
இதனை அடுத்து, சென்னையை சேர்ந்த பிரபாகரன், இம்தியாஸ், ஜான் ஜோசப், ரசூல்கான், முபாரக் ஆகியோருடன் இணைந்து யுவராஜ் ரூபாய் நோட்டு பிரிண்ட் எடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இதற்காக மணலி புதுநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து ரகசியமாக தங்களது திட்டத்தினை செயல்படுத்தி வந்திருக்கிறது இந்த கும்பல்.
சத்தம்
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ரகசிய ஆப்பரேஷன் நடைபெறும் வீட்டிற்கு வந்த யுவராஜ் தன்னிடம் தருவதாக கூறிய 60 லட்சம் ரூபாயை கொடுக்கவில்லை என ரசூலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், 200 ரூபாய்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்யும்படியும் யுவராஜ் கூற இதனால் கும்பலுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் பலத்த சத்தம் ஏற்படவே, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்திருக்கின்றனர். இதனை அடுத்து அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த பிரிண்டர்கள் மற்றும் 11 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்த கும்பல் போலி நோட்டுகளை புழக்கத்தில் விடவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கும்பலுடன் தொடர்புள்ள மற்றொருவரை தேடிவருவதாகவும் கூறியுள்ளனர்.
சென்னையில் மணி ஹெய்ஸ்ட் பாணியில் வீட்டிற்குள் ரூபாய் பிரிண்ட் செய்த கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"யாரு சாமி இவன்… கொஞ்ச நேரத்துல மிரட்டிட்டான்” – முதல் போட்டியிலேயே தரமான சம்பவம் செய்த RCB வீரர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் நடக்கும் 'சீனிவாச கல்யாணம்'.. வெளியான அறிவிப்பு!
- "உழைச்சவங்களுக்கு நல்லது செய்யணும்".. 100 ஊழியர்களுக்கு பிரபல நிறுவனர் அளித்த நெகிழ்ச்சி பரிசு..!
- "கொரோனா விஷயத்துல இதை சாதிக்க உதவுன எல்லோருக்கும் நன்றி"…. பிரபல மருத்துவனை Dean நெகிழ்ச்சி தகவல்!
- வீட்டுக்குள்ள பேய் வந்திடுச்சு.. வெளியுலகத்துக்கே வராம வீட்டுக்குள்ளேயே முடங்கிய இளம்பெண்.. மீட்க போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- சென்னையில் இருந்து டெம்போ வேனில் சொந்த ஊருக்கு சென்ற குடும்பம்.. உளுந்தூர்பேட்டை Toll gate அருகே அதிர்ச்சி..!
- தொட்டால் ஷாக்.. லட்சத்துல வாங்கி கோடில விற்கலாம்.. கூட்டாளிகளின் நூதன உருட்டால் அதிர்ந்துபோன நபர்..!
- “போன் தொலைஞ்சா இத மட்டும் உடனே பண்ணுங்க”.. எஸ்பி கொடுத்த சூப்பர் தகவல்..!
- நடிகரின் மரணம்.. 24 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய முக்கிய புள்ளி.. வீட்டுக்குள்ள ஃபுல்லா பாட்டிலு.. கூடவே ரெண்டு பொண்ணுங்க வேற
- சந்தேகப்பட்ட காதல் கணவன்.. கடுப்பில் மனைவி செஞ்ச பகீர் காரியம்.. பொள்ளாச்சியில் பரபரப்பு..!
- 'போன்-அ செக் பண்ணனும்னு போலீஸ் கேட்டா.. இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க'..அதிரவிட்ட கமிஷ்னர்..!