பாதி 'இதுலயே' சரியாகிருச்சு... கொரோனாவை 'வென்று' டூட்டிக்கு திரும்பிய 'போலீஸ்' உருக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை காவல் துறையில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை முடிந்து தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அவரை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் வாழ்த்தி வரவேற்றார்.
சென்னையிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த எஸ்.ஐ அருணாச்சலம் என்பவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் 14 நாட்கள் சிகிச்சை பெற்றவர், பின்னர் வீட்டில் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். சிகிச்சை முடிந்து இன்று மீண்டும் பணியில் சேர்ந்த அவரை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து எஸ்.ஐ அருணாச்சலம் கூறுகையில், 'கடந்த மாதம் பணியில் இருந்த போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். நான் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் என்னை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் என்னை சிறப்பாக கவனித்து கொண்டனர். நான் குணமடைவதற்கு மிக முக்கிய காரணம், என்னுடைய உயர் அதிகாரிகளும், என்னுடன் பணியாற்றியவர்களும் என்னோடு உறுதுணையாக இருந்தது தான். அவர்களின் ஒத்துழைப்பிலேயே எனக்கு பாதி நோய் குணமாகியது. 28 நாட்கள் முழுமையான சிகிச்சைக்கு பின் மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் வந்ததால் தற்போது பணியில் சேர்த்துள்ளேன்' என தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் கே.விஸ்வநாதன் கூறுகையில், 'கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 190 காவலர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி பணிக்கு வரவேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கொரோனா பாதித்த காவலர்கள் மீது உடனடியாக அக்கறை செலுத்திய தமிழக முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிதைச்சு' போட்டுட்டு போய்ட்டாங்க... மோட்டார் சைக்கிளில் வந்த 'கள்ளக்காதல்' ஜோடிக்கு... 'மதுரை' அருகே நிகழ்ந்த பயங்கரம்!
- ‘ஒரே நைட்டில் 19 கொலை’.. ‘ஹிட்லர்’ ஸ்டைலை பாலோ பண்ணேன்.. போலீஸை மிரளவைத்த இளைஞர் வாக்குமூலம்..!
- 'மகள்களை' வீடியோ எடுத்து... அம்மாக்களை 'மிரட்டிய' காசி... வெளியான 'பரபரப்பு' தகவல்!
- ‘சித்தியுடன் தகாத உறவு’.. கண்டித்த அத்தைக்கு ‘கத்திக்குத்து’.. சென்னையை அதிரவைத்த கொலையின் பகீர் பின்னணி..!
- "லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க?".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி!
- படுக்கையறையில் 'பிணமாக' கிடந்த மனைவி... 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து 'கணவர்' தற்கொலை... 'அடுக்கடுக்காக' காத்திருந்து அதிர்ச்சிகள்!
- தமிழகத்தை என்ன நிலையில் வைத்துள்ளது கொரோனா?.. ஒரே நாளில் 4 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- "சென்னையின் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா!".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'!
- ‘கேட் திறந்து இருந்துச்சு’.. ரோட்டில் ‘அலறி’ துடித்த சிறுவன்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'டேய் நீ பண்றது பெரிய தப்பு'... 'அது என்னோட தம்பி மனைவி'... 'ஆத்திரத்தில் இளைஞர் செய்த பாதகம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!