'ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த பெண்'... ‘அறிவுறுத்தலை மீறி’...‘வெளியே சுற்றியதால்’... ‘அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர், கொரோனா தடுப்பு மருத்துவ கண்காணிப்பு வளையத்தை மீறி, வெளியே சென்று வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வெளிநாட்டு பெண்மணி ஒருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கி இருப்பதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மருத்துவ குழுவினருடன் அடுக்கு மாடி குடியிருப்புக்கு விரைந்த பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், Hwang shin hung என்ற அந்தப் பெண்ணுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை என உறுதி செய்தனர்.

எனினும் ஹாங்காங்கில் இருந்து கடந்த 27-ம் தேதி சென்னை வந்த இவர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என மருத்துவ கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் இதனை மீறி அந்த பெண்மணி வெளியே சென்று வருவதாக புகார் எழுந்ததால், அவரை வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். கொரோனா அச்சத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAIHORROR, CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்