VIDEO: "அந்த சிகிச்சை செலவு ₹ 5 கோடி".. வாழ்நாளை எண்ணும் மகளுக்காக மன்றாடும் சென்னை பெற்றோர்..! உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை படப்பையில் வசித்துவருபவர் முத்துப்பாண்டியன், இவரது மகள் லயா.  லயாவுக்கு இருக்கும் அரிய வகை புற்றுநோயை குணப்படுத்துவதற்கு போராடும் இவரது பெற்றோர் பிஹைண்ட்வுட்ஸ் டிவி சேனலில் அண்மையில் பேசியபோது,  “முதலில் எங்கள் மகளுக்கு சாதாரண காய்ச்ச்ல என நினைத்தோம்.  ஆனால் தொடர்ந்து 6 மாதமாக உடல் நலப் பிரச்சனை இருந்த பின்பே,  பெரிய ஹாஸ்பிடல் சென்று பரிசோதித்ததில்,  அவருக்கு  இருந்தது கடுமையான லிம்போசைடிக் லுகேமியா  (Acute lymphocytic leukemia - ALL) வகை புற்றுநோய் என உறுதியானது.

Advertising
>
Advertising

இதனை அடுத்து கடந்த 2018-ல் தொடங்கி இரண்டரை வருடம் Induction chemotherapy சிகிச்சை மேற்கொண்டோம். அதற்கு 25 முதல் 30 லட்ச ரூபாய் செலவு செய்தோம். ஆனால் அடுத்த மாதம் பரிசோதனைகள் எடுத்து பார்த்ததில் குணமாகவில்லை. பின்னர்  சென்னை தேனாம்பேட்டை அப்போலோவில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்டோம். இதற்கும் 40 லட்ச ரூபாய் வரை செலவாகிவிட்டது.

ஆனாலும் அந்த சிகிச்சை செய்துபார்த்த பின்னும் இந்த நோய் குணமாகவில்லை என்பதால், இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள 3வது ஸ்டேஜ் கார் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நம் நாட்டில் இந்த சிகிச்சை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. நம் உடலில் இருக்ககூடிய வெள்ளையணுக்களை வெளியே எடுத்து, உள்ளிருக்கும் கேன்சர் செல்களுடன் சண்டை போடுவதற்குரிய வலிமையுள்ள செல்களாக மாற்றி உள்ளே அனுப்பும் இந்த சிகிச்சையை இஸ்ரேலில் உள்ள நம்பர்.1 மெடிக்கல் செண்டரில் பண்ணுவதற்கு எஸ்டிமேட் தந்திருக்கிறார்கள். இதன் மதிப்பு 4.5 முதல் 5  கோடி ஆகும் என குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சிகிச்சை மூலம் 90 % இந்த நோயை குணப்படுத்திவிட முடியும் என கூறுகிறார்கள்.

இந்த ஒரு சிகிச்சைதான் மருந்துகளை தாண்டி, கேன்சரை குணமாக்குவதற்கு இருக்கும் ஒரே உயரிய சிகிச்சை.  தமிழ்நாட்டில் 9 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் 1 ரூபாய் கொடுத்தாலும் நான் என் குழந்தையை நான் மீட்டுவிடுவேன். ஏற்கனவே சொத்துக்கள், நகைகளை விற்றுவிட்டோம். இது போக நண்பர்களிடமும் வங்கியிலும் கடன் பெற்றோம். பெற்ற குழந்தையின் வாழ்நாளை எண்ணும் சூழ்நிலை கொடுமையானது.  இன்னும் 10 நாளுக்குள் அந்த இஸ்ரேல் சிகிச்சைக்கு நாங்கள் செல்லவில்லை என்றால், பணம் வந்தாலும் கூட அது பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.” என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த குழந்தையின் உடல்நலம் குணமாக பல தன்னார்வலர்கள் முன்வந்த தங்களால் இயன்றதை செய்துள்ளனர். அவர்களுள் Chennai Metro Friends Lions Club சார்பில் 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர். இது குறித்து Chennai Metro Friends Lions Club சார்பில் அதன் President ஜெயப்பிரகாஷ் குறிப்பிடும்போது, “எங்கள் கிளப்பில் விளம்பர ஏஜென்ஸி வைத்திருக்கும் Ln சக்திவேல் எங்களுக்கு இந்த புரோபோசலை கொடுத்தார். எங்களது Charted President,  Ln கோபிநாதன் எங்களுக்கு இதை செய்யலாம் என ஊக்கமளித்து முன்மொழிந்தார்.  Ln முத்துகிருஷ்ணன்,  Ln பாஸ்கர் என எங்களது அரிமா உறுப்பினர்கள் பலரும் இதில் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

நாங்கள் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை சமூகம் சார்ந்தும், தனி நபர்களுக்கும் செய்துவருகிறோம். மேற்கண்ட இந்த குழந்தையின் விஷயத்தில் அவருக்கான சிகிச்சை மிகவும் அரிதானதாகவும் ,விலை உயர்ந்ததாகவும் இருப்பதாக அறிந்தோம். எனவே எங்களுக்கு இருந்த மிக குறுகிய காலத்தில் எங்களால் இயன்ற பங்களிப்பை தந்தோம். இதுபோன்ற நிறைய பேருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. தன்னார்வலர்கள் பலரும் முன்வந்து உதவ வேண்டும், அந்த குழந்தைக்கும் பரிபூரணமாக குணமாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என கேட்டுக்கொண்டார்.

குழந்தையின் பெற்றோர் பேசும் முழு தகவல்களும், குழந்தைக்கு நிதியளிக்க வேண்டிய வங்கி விபரங்களும் இணைப்பில் உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளன. 

EMOTIONAL, HOSPITAL, SAVE CHILD, KILL CANCER, CANCER TREATMENT, MEDICINE, TRUST, TREATMENT HELP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்