'எப்போதுமே டூட்டிக்கு தான் முக்கியத்துவம்'... 'பல்லாவரம் உதவி ஆணையருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சியில் சென்னை காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்குப் பிறகு கொரோனாவிற்கு எதிராக முன்கள பணியாளர்களாக நிற்பது காவல்துறையினர் தான்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பணியிலிருந்த சென்னை பல்லாவரம் காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் கிண்டி கொரோனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களில் ஒருவரான சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ஈஸ்வரனின் மரணம் சென்னை காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அரசு தீவிர கட்டுப்பாடுகளை எடுத்து வரும் நிலையில், இன்னும் சிலர் கொரோனா குறித்த அச்சம் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகிறார்கள்.

எனவே தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பது என்பது நமக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவுக்கு எதிராக முன்கள பணியாளர்களாக நிற்கும் காவல்துறை மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாகும். அதோடு அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது எனப் பலரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்