'தமிழகத்தில் பாஜக-வின் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது'... 'அதற்கு முக்கிய காரணம் இதுதான்'... சென்னையில் நிர்மலா சீதாராமன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் தொழிலதிபர்கள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன், பாஜகவின் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சென்னையில் தொழிலதிபர்கள்  வியாபாரிகள் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், வேளாண் சட்டத்தால் உங்கள் நிலத்தை கார்ப்பரேட் எடுத்துக் கொள்வார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். கூட்டுறவு முறையில் பால் வியாபாரம் செய்பவர்கள் மாடுகளை அழைத்துச் சென்று விடுகிறார்களா? விவசாயிகளிடம்தான் மாடு உள்ளது?

தற்போது பால் உற்பத்தியில் இந்தியாதான் நம்பர்-ஒன் நாடாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. விவசாயிகளுக்காக இங்கு அரசியல் கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ் மீனவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் மீட்டவர் மோடி.

தமிழகத்திலிருந்து ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும் மோடி தமிழகத்தைப் புறக்கணிக்கவில்லை. தமிழகத்திற்கு சைனிக் பள்ளிகள் கொண்டு வரப்படும், எனப் பேசினார். இதனிடையே அறமில்லாத அரசியல் நடத்தி, நாத்திகத்தை வளர்த்து, ஜாதி மதத்தால் மக்களை வேறுபடுத்திய கட்சிகளுக்கு மத்தியில் தமிழகத்தில்,பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு பெருகி வருகிறது, என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்