'திடீரென அசுரத்தனமாக மாறிய இளைஞரின்'...'உறைய வைக்கும் செயல்'...சென்னையில் பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையோரம் தங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, முதியவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தொழிற்பேட்டை வெள்ளாளர் தெருவில் வசித்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது தலையில் பலத்த ரத்த காயத்துடன் மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், விபத்து ஏற்பட்டு அவர் இறந்து இருக்கலாம் என விசாரணையைத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தான் போலீசார் அதிர்ந்து போனார்கள். கேமராவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், முதியவரை ஓட ஓட விரட்டி தாக்கும் கோரமான காட்சிப் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வட மாநில வாலிபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், வீட்டில் சண்டை போட்டுவிட்டு சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னைக்கு வந்த அந்த நபர், வேலை கேட்டுப் பல இடங்களுக்கு அலைந்துள்ளார். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து சாலையோரத்தில் தங்குவது தொடர்பாக, அந்த இளைஞருக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மிருகத்தனமாக மாறிய அந்த இளைஞர், வயதான மனநலம் பாதிக்கப்பட்ட அந்த முதியவரை ஓட ஓட விரட்டி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
கொரோனாவுக்கு 'தீர்வு' கண்ட பெண் விஞ்ஞானியை... மிரட்டி 'பணிய' வைத்ததா சீனா?... வெளியான 'புதிய' தகவல்!
தொடர்புடைய செய்திகள்
- 'இது' இல்லாம 'வெளியே' வராதீங்க... மீறுனா 'நடவடிக்கை' எடுப்போம்: சென்னை மாநகராட்சி
- 'ரகசியமா' குக்கரை பயன்படுத்தி... 'வாலிபர்' செஞ்ச வேலை... 'அதிர்ந்து' போன போலீசார்!
- பாலியல் 'வன்கொடுமையால்' 9-வகுப்பு மாணவி கர்ப்பம்... பள்ளி 'சிறுவர்கள்' உட்பட 8 பேர் கைது!
- 'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது!?... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல!'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் புதல்வனின் பாசப் போராட்டம்!
- மருந்து வாங்க போன கணவரிடமிருந்து வந்த ஒரு ‘போன் கால்’.. உடனே கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்ற ‘கர்ப்பிணி’!
- 'திருடனுக்கு கொரோனா தொற்று...' தனிமைப்படுத்தப்பட்ட 'நீதிபதி, 17 போலீசார்'... 'தலைகீழாக' மாறிய 'நிலைமை...'
- 'இதற்கு' மட்டுமே விதிவிலக்கு... மலைக்கோட்டை நகரத்துக்கு 'கடுமையான' கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை!
- ஊரடங்கு நேரத்தில் 'கள்ளக்காதலியை' பார்க்க... 200 கிலோமீட்டர் 'பயணித்த' முதியவர்... ஹைலைட்டே காரில் ஒட்டியிருந்த 'ஸ்டிக்கர்' தான்!
- ‘ஊரடங்கில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது’... ‘ஆண்களுக்கும், பெண்களுக்கும்’... ‘எச்சரிக்கை விடுத்த ஏடிஜிபி ரவி’!
- ‘பயிருக்கு தண்ணீர் பாய்ச்சலனா கருகிடும்’... ‘குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு சென்ற விவசாயிக்கு'... 'மர்மநபர்களால் ஊரடங்கின் போது நடந்த பயங்கரம்’!