'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'!.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஜாபர்கான்பேட்டையில் குடியிருந்தவர் 53 வயதான ரவி. திருமணம் ஆகாத ரவி, தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தபடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இதனால் இவருக்கு கடந்த சில தினங்களாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்ட ரவியை அவரது வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியதால், அவரது சகோதரி ரவியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தங்குவதற்கு வீடு இல்லாத ரவி ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தெருவிலேயே தங்கியதாகவும், காய்ச்சல் அதிகமானதால் கொரோனா பயம் காரணமாக சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து ஜாபர்கான்பேட்டை பகுதிக்கு திரும்பி வந்தார். ஆனாலும் அவரது சகோதரி, வீட்டில் தங்குவதற்கு அனுமதி அளிக்காததால், ஆள் நடமாட்டமில்லாத தெருவிலேயே படுத்துறங்கியுள்ளார். ஆனால் நள்ளிரவில் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட ரவியின் உயிர் பிரிந்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் ரவி இறந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. இந்த சமயத்தில் நீண்ட நேரமாக ஒருவர் அசைவற்று கிடப்பதை பார்த்த சிலர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க, போலீஸார் விரைந்து வந்து ரவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ரவிக்கு கொரோனா தொற்று இல்லை என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர. இதனை அடுத்து போலீஸாரும் ரவியின் உறவினர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்தனர். மேலும் ரவி எதற்காக வீட்டில் தங்காமல் தெருவில் படுத்திருந்தார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உண்மையிலேயே கொரோன அச்சம் காரணமாகத்தான், தெருவில் இறந்து கிடந்த ரவியின் சடலம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக, யாரும் நெருங்காத வகையில் அநாதையாக கிடந்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா!.. தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
தொடர்புடைய செய்திகள்
- 'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப்படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...
- 'இந்த' மருந்தால் 'நல்ல' பலன்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்'... அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ள 'மகிழ்ச்சி' செய்தி...
- 'கொரோனா விஷயத்தில்’... ‘எங்களை தவறாக வழிநடத்துகிறது’... 'திரும்பவும் கொந்தளித்த ட்ரம்ப்’!
- அதனால் என்ன?... தொடர்ந்து 'அதிகரிக்கும்' உயிரிழப்பால் 'நிலைகுலைந்துள்ள' மக்கள்... 'அதிரவைக்கும்' அதிபர் பதிலால் 'கொந்தளிப்பு'...
- 'இது எங்க போய் முடியுமோ'... 'கணக்கில் வராத இறந்தவர்கள்'... 'புதிய லிஸ்டை வெளியிட்ட நாடு'... நொறுங்கி போன மக்கள்!
- 'சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி...' 'கடந்த 2 நாட்களில் 75 பேருக்கு தொற்று உறுதி...' 'நிலைமை மோசமாக இதுதான் காரணம்...'
- 'ஏசி இல்லாம இருக்க முடியாது தான்'... 'ஆனா கொரோனாவ கண்ட்ரோல் பண்றது'... உங்க ரிமோட்லையும் இருக்கு!
- “புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்து ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்!” - நிபந்தனைகளுடன் மத்திய அரசு உத்தரவு!
- 'ஊரடங்கால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்'... 'பெண்களுக்கு வரபோகும் ஆபத்து' ... ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
- ''காசநோய் தடுப்பூசியால் கொரோனா உயிரிழப்பு குறையுதா? ''அறிவியல் என்ன சொல்கிறது?...'' 'உலக சுகாதார மையத்தின் திட்டவட்ட பதில்...'