'ரொம்ப த்ரில்லா இருக்கு'! 'நீங்க பாத்து போங்க'.. 'பாராகிளைடிங்'கால் பறிபோன புதுமாப்பிள்ளை உயிர் ..! தம்பி உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுமணதம்பதி தேனிலவு சென்ற இடத்தில் பாராகிளைடரில் இருந்து தவறிவிழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்தது குறித்து மணமகள் சகோதரரின் நண்பர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த். பி.எஸ்.சி பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து தேனிலவுக்காக கடந்த 15ம் தேதி இமாச்சல பிரதேசம் மணாலி சென்றனர். அங்கு பாராகிளைடரில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக அரவிந்த கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான பத்தே நாளில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பிரீத்தி சகோதரரின் நண்பர் ஒருவர் இந்த விபத்து குறித்து பகிர்ந்துள்ளார். அதில், சிறுவயதில் இருந்து பிரீத்தி அக்காவை எனக்கு தெரியும். பி.பி.ஏ படித்துவிட்டு சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் அரவிந்த் அண்ணனுக்கும் 10ம் தேதிதான் திருமணம் நடந்தது. இருவரையும் விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தோம். மணாலியில் சந்தோஷமாக இருப்பதாக பிரீத்தி அக்கா வீட்டுக்கு போன் பண்ணி சொன்னார். நேற்று (19.11.2019) ஊருக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அரவிந்த் அண்ணன் சடலமாக வீட்டுக்கு வந்திருக்கிறார். மணாலியில் பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் பாராகிளைடிங் விளையாட ஆசைப்பட்டுள்ளனர். முதலில் பிரீத்தி அக்கா பாராகிளைடிங்கில் பறந்துவிட்டு வந்துள்ளார். அந்த அனுபவத்தை அரவிந்த் அண்ணனுடன் பகிர்ந்துள்ளார். அப்போது ரொம்ப த்ரில்லா இருந்தது நீங்க பாத்து போய்ட்டு வாங்கனு பிரீத்தி அக்கா கூறியுள்ளார். பாராகிளைடிங்கில் அரவிந்த் அண்ணனும், பயிற்சியாளரும் பறந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இருவரும் தவறி விழுந்ததைப் பார்த்து அக்கா அலறி துடித்துள்ளார்.

அதில் பயிற்சியாளர் உயிர் பிழைத்துவிட அரவிந்த் அண்ணன் மட்டும் இறந்துவிட்டதாக அக்காவிடம் தெரிவித்துள்ளனர். தனியாளாக பிரீத்தி அக்கா, தன் சோகத்தை யாரிடமும் சொல்லக் கூட முடியாமல் தவித்துள்ளார். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் இருவரின் வீட்டினரும் உடனே இமாச்சல பிரதேசத்துக்கு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

CRIME, CHENNAI, HONEYMOON, PARAGLIDING, DIES, MARRIED, KULLU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்