"வருஷத்துக்கு 10 கோடி பேர்".. சென்னையின் புதிய ஏர்போர்ட்-ல் அமைய இருக்கும் விசேஷங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் அமைய இருக்கும் புதிய விமான நிலையம் 1 ட்ரில்லியன் பொருளாதார பயணத்தின் முதல் படியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Advertising
>
Advertising

Also Read | அடி தூள்.. "சென்னையில் 2 வது ஏர்போர்ட் இங்க தான்".. விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!

இரண்டாவது விமான நிலையம் 

சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதாகவும், கூடுதலாக சென்னைக்கு அருகே மற்றொரு விமான நிலையம் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதனை தொடர்ந்து திருப்போரூர், படாளம், பன்னூர், பரந்தூர் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதனை தொடர்ந்து திருப்போரூர், படாளம், பன்னூர், பரந்தூர் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த இடங்களில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களை தேர்ந்த்தெடுத்தனர். இந்நிலையில், நேற்று விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சென்னையை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மாநிலங்களவையில் அறிவித்தார்.

10 கோடி பயணிகள்

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,"தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும். புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது" எனக்  குறிப்பிட்டுள்ளார்.

20 ஆயிரம் கோடி திட்டம்

மேலும், இந்த திட்டத்தின் உத்தேச திட்டமதிப்பு 20 ஆயிரம் கோடி எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமானநிலைய முனையங்கள், இணைப்புப்பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறும் என முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த புதிய விமான நிலையம் முக்கிய மைல் கல்லாக இருக்கும் எனவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read | விமானத்துக்கு கீழே வேகமாக சென்ற கார்.. கொஞ்ச நேரத்துல பதறிப்போன அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!

CHENNAIAIRPORT, CHENNAI NEW AIRPORT, MK STALIN, விமான நிலையம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்