'சென்னை கழிவு நீரில் 'கொரோனாவின் இறந்த செல்கள்'... 'தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கண்டுபிடிப்பு'... பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கழிவு நீரை பரிசோதித்ததில் கொரோனா வைரசுக்கான இறந்த செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவாது என தற்போது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையின் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுப்பதற்காக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பக்கமாக, சென்னையிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் எந்த அளவு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள ராயபுரம், பெருங்குடி, அடையாறு, நெசப்பாக்கம், கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட 2 பரிசோதனை கூடங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அதன் முதல் கட்ட ஆய்வில், சென்னையில் சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில், கொரோனாவின் இறந்த செல்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கழிவு நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகள், கழிவு நீரில் இருக்கும் வைரசை கொன்று விடுவது தற்போது தெரியவந்துள்ளது.
தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் தான் கொரோனா வைரஸின் இறந்த செல்கள் கழிவு நீரில் வெற்றிகரமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கமே, கழிவு நீரில் நோய்த் தொற்றுகள் இருந்தால், அந்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவுதற்காக காரணங்களை அடையாளம் காண்பதுடன், கிருமி நாசினிகள் தெளிப்பது போன்ற போர்க்கால நடவடிக்கைகளை எடுப்பதாகும்.
இதனிடையே நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், நோய் தணிந்த பிறகும், கழிவுநீரை தொடர்ந்து கண்காணிப்பது மூலம் நோய் தொற்று பரவுகிறதா என்பது குறித்து, கண்காணிக்க இந்த ஆய்வுகள் உதவும் என, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுபானத்துக்கு 70% சிறப்பு 'கொரோனா' கட்டணம்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
- ‘2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை’... 'இந்தியாவில்'... 'மகிழ்ச்சியுடன் கூறிய 2 மாநிலங்கள்'!
- 'ஒரே ஒரு ஸ்னாக்ஸ் பாக்கெட்ட வச்சு, 2.25 லட்சம் ஆட்டைய போட்ட கும்பல்'... 'ஆன்லைனில் ஆர்டர்'... காத்திருந்த பேரதிர்ச்சி!
- 'மே மாதத்துக்கான உதவித் தொகை’... ‘இவர்களின் வங்கிக் கணக்கில் மட்டும்’... ‘ மத்திய அரசு செலுத்திய பணத்தை எடுத்துக்கொள்ளலாம்’!
- சென்னை கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிக மூடல்!.. மார்க்கெட் நிர்வாகம் அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனா இயற்கை கொடுத்த தண்டனை'...'வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண்'... 'திடீரென போட்ட பதிவு'... மர்மம் விலகுகிறதா?
- ‘சென்னையில் அம்மா உணவகம்’... ‘பெண் பணியாளருக்கு கொரோனா’... 'எப்படி பரவியது'... 'வெளியான தகவல்'!
- தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று உறுதி!.. என்ன காரணம்?.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!
- 'மரணத்தை கண்ணு முன்னாடி பார்த்தேன்'... 'கொரோனா வார்டில் நடந்தது என்ன'?... 'இங்கிலாந்து பிரதமர் உருக்கம்'... டாக்டருக்கு செய்த கைமாறு!
- குக்கரை வைத்து மட்டையாவது எப்படி?.. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. திருள்ளூரில் பரபரப்பு!