‘நிலாவுல தண்ணி கெடச்சா யாருக்கு முதல்ல சொல்லணும்னு உங்களுக்கு தெரியும்’ சென்னை மெட்ரோ வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இஸ்ரோ வெற்றிகரமாக சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியதை பாராட்டும் விதமாக சென்னை மெட்ரோ வித்தியாசமாக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன்-2 விண்கலம் சுமார் 978 கோடி ரூபாய் செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. நேற்று சரியாக மதியம் 2.43 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது. இது நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் சென்னை மெட்ரோ வாட்டர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வித்தியாசமான முறையில் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அதில், ‘சந்திராயன்-2 விண்கலத்திற்காக இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள். நாங்களும் புதிய நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம். ஒருவேளை நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தால் முதலில் யாருக்கு சொல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியும்’ என நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்