‘டிக்கெட் கட்டணத்தில் 50% சலுகை’.. சென்னை மெட்ரோ அதிரடி அறிவிப்பு..! விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் அடிக்கடி அதிரடி சலுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் விடுமுறை தினங்களில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்க முடிவெடுத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதனை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடி செய்யப்படும் என தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHENNAIMETRO, TICKET, DISCOUNTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்