'இந்த' வாட்ச் உங்களிடம் இருக்கா?.. அப்போ ஈஸியா பயணம் செய்யலாம்!.. சென்னை மெட்ரோ ரயில் புதிய திட்டம்!.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியுடன் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் வகையில் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலைய தானியங்கி பயணச்சீட்டு நுழைவுவாயிலில் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் ஒளிரும் வெளிச்சம் மூலமாக நிலையத்தின் உள்ளே சென்று ரயிலில் எளிதாக பயணிக்க முடியும்.

ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தற்போது மெட்ரோ ரயில் சேவை செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், பயணத்தின்போது நேரடித் தொடர்புகளை தவிர்க்கும் வகையில் புதிய முறைகள் நடைமுறையில் உள்ளன. அதாவது கியூஆர் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெறுதல், ஸ்மார்ட் கார்டு பெறுதல் ஆகிய தொடுதல் இல்லா பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக நிலைய ஊழியருடன் தொடர்பு தவிர்க்கப்படுவதுடன் நேரமும் சேமிக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக தொடர்பில்லாமல் பயணச் சீட்டு பெற்று பயணிக்கும் விதமாக புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிசோதனகள் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்