ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் விலையில் 50% டிஸ்கவுண்ட் ..? சென்னை மெட்ரோவின் புதிய திட்டம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்சேவை, வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், விரைவான போக்குவரத்து வசதிக்காவும் கொண்டு வரப்பட்டது. இதில் வார நாட்களில், நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிமான பயணிகள் பயணிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விடுமுறை நாட்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே பயணிப்பதாக கூறப்படுகிறது. அதனால் விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு டிக்கெட் கட்டணத்தில் சலுகை கொண்டு வர மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் விடுமுறை தினங்களிலும் இந்த சலுகையை அளிக்கலாம என மெட்ரோ நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மெட்ரோ ரயில்ல செய்ற காரியமா இது?'.. இளைஞரின் விநோதமான செயலால் அதிர்ந்த சக பயணிகள்!
- ‘மெட்ரோ ரயிலில் இதெல்லாம் பண்ணாதீங்க’... ‘ரயில் நிர்வாகம் எச்சரிக்கை’!
- ‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..
- பேஸ்புக் 'லைவ் ஸ்ட்ரீமில்'.. மெட்ரோ ஊழியரின் விபரீத செயல்.. பதற வைத்த சம்பவம்!
- 'நீ எனக்கு சொல்லி தர்றியா?'.. 'டிக்கெட் பரிசோதகரின் செயலால்'.. அதிர்ந்து போன ரயில் நிலையம்!
- ‘பெண்கள் மட்டுமில்ல இனி இவங்களும் மெட்ரோல இலவசமா போகலாம்’.. கலக்கப் போகும் மாநில அரசு!
- சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து..! வெளியான சிசிடிவி காட்சிகள்..!
- 'சீ' அசிங்கமா இல்ல' ... 'பொண்ணுங்க முன்னாடி இப்படியா'?... 'மெட்ரோ'வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்' !
- 'பொண்ணுங்களுக்கு' மட்டும் இலவசமா?... 'வேண்டாம்'... 'எல்லாரும் காசு கொடுத்து போட்டும்'!
- முன்பைவிட ‘இன்னும் அதிகாலையிலேயே’.. மாறிய மெட்ரோ ரயில் நேரம்.. உற்சாகத்தில் சென்னைவாசிகள்!