கொரோனாவ Control பண்ண... 'சென்னை' மெட்ரோவின் அசத்தல் பிளான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுள்ள பகுதிகளில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், மக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசத்தினை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொது போக்குவரத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒரு புதிய முயற்சியினை கையில் எடுத்துள்ளது. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயிலில் உள்ள லிப்டில் பட்டன்களை கால்களில் இயக்கும் முறையில் வடிவமைத்துள்ளது.

தற்போது கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் விரைவில் மற்ற மெட்ரோ ரெயில் நிலையத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்