'இன்ஸ்டாகிராம்' பாதுகாப்பில் விழுந்த ஓட்டை'...கண்டுபிடித்த 'சென்னை' பையனுக்கு அடித்தது 'ஜாக்பாட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு, அந்நிறுவனம் 30ஆயிரம் டாலர் பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் மற்றும் அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருபவர் லக்ஷ்மண் முத்தையா. சென்னையை சேர்ந்த இவர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள். இதிலுள்ள பயனாளர்களின் கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்ற வழியை முத்தையா கண்டுபிடித்துள்ளார்.

ஒரு பயனாளர் தனது பாஸ்வேர்டு மாற்றும் வசதியை வைத்து அதனை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்துள்ளார். ஒருவர் தனது பாஸ்வேர்டை மாற்றும் போது அதற்கு தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் அவரது கணக்கை எளிதாக ஹேக் செயலாம் என்பதை லக்ஷ்மண் முத்தையா செய்து காட்டியுள்ளார். அதோடு இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். இதனை ஆராய்ந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக இந்த பாதுகாப்பு குறைபாட்டினை சரி செய்துள்ளார்கள்.

அதோடு இதுபோன்ற பாதுகாப்பு குறைபாட்டினை கண்டுபிடித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முத்தையாவிற்கு 30ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக அளித்துள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பில் லக்ஷ்மண் முத்தையாவிற்கு 20.56 லட்சம் பரிசாக கிடைத்துள்ளது.

INSTAGRAM, CHENNAI, LAXMAN MUTHIYAH, BUG, $30, 0, SECURITY RESEARCHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்