'தி.நகரில் பரிதாபம்'...'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க'... 'புரோடக்சன் மேனேஜர் செய்த விபரீதம்'... சென்னைவாசிகளை அதிரவைத்துள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார். மருத்துவரான இவரும், பெருங்குடியைச் சேர்ந்த சிவநேசன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். சிவநேசன் கடந்த 27 வருடமாகச் சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தில் புரோடக்சன் மேனேஜராக, காசிப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சளி மருந்து உட்பட பல்வேறு மருந்துகளைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது உலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரித்தால் கொரோனாவை எப்படியும் கட்டுப்படுத்திவிடலாம் எனக் கூறி, தீவிரமாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவரது சோதனை எல்லாம் அவரது நண்பரான மருத்துவர் ராஜ்குமார் வீட்டில் நடந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று பரிசோதனையிலிருந்த சிவநேசன், சோடியம் நைட்ரேட் கரைசலைப் பரிசோதனைக்காக அவரே குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, உடனடியாக தி. நகரில் உள்ளார் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதாகக் கூறி, ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சட்டென '75 ஆயிரத்தை' கடந்த 'பலி' எண்ணிக்கை... 'நடுநடுங்கிப்'போய் நிற்கும் நாடு!
- நாட்டிலேயே 'இந்த' 8 நகரங்களில் தான் 'ரொம்ப' அதிகம்... 'சென்னை'க்கு எத்தனாவது எடம்?
- "இன்ஸ்டாகிராம் காதலி ஹெல்ப் கேட்டா!".. "அதுக்கு இப்படியா செய்வீங்க?".. லாக்டவுனில் போலீஸாரை உறையவைத்த 3 புள்ளிங்கோக்கள்!
- ‘இந்தியாவில் இப்டியே போச்சுனா’... ‘ஜூன், ஜூலையில்’... ‘கலக்கத்தை ஏற்படுத்தும்’... ‘எய்ம்ஸ் இயக்குநரின் தகவல்’!
- ஒரே நாளில் இரண்டாவது கோரம்... ஆந்திராவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் 'விஷ வாயு கசிவு'!.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- முதல் நாளே அட்டூழியம்!.. மது போதையில் கார்-ஐ தலைகுப்புற கவிழ்த்திய இளைஞர்கள்!.. பொதுமக்கள் கொந்தளிப்பு!
- தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!.. வைரஸ் தொற்று வேமெடுத்தது எப்படி?
- 'ஒத்திவைக்கப்பட்ட 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான’... ‘பொதுத் தேர்வு தேதியை அறிவித்த மாநிலம்’... ‘கொரோனா பாதிப்பு குறைவால் அதிரடி’!
- 'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...