'ஆசிர்வாதம் பண்ணா தங்க மோதிரம் கெடைக்கும்...' 'டெய்லி ஒண்ணு இப்படி நடக்குது...' - சிசிடிவியில் தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த சில மாதங்களாகவே மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், போரூர் உள்ளிட்ட பல இடங்களில் மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து நகைகளை திருடி சென்றுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே மாதிரியாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் திருமலை எனும் ஒரே நபர் பலரிடம் இதுபோல கைவரிசை காட்டியது சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதையடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் பதுங்கியிருந்த திருமலையை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட திருமலை இதற்கு முன்பும் பல முறை கைது செய்யப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்துள்ளார். கடந்த மாதம் பிணையில் வந்த திருமலை, வெளியில் வந்ததிலிருந்து தினமும் ஒரு குற்றச் சம்பவம் என 20 மூதாட்டிகளிடம் நகை பறித்துள்ளான்.

நகைகள் அணிந்துள்ள மூதாட்டிக்களை மட்டும் குறிவைத்த திருமலை, அவர்களிடம் சென்று அருகில் உள்ள ஏதாவது ஒரு வீட்டை காண்பித்து அது நகை கடை உரிமையாளர் வீடு எனவும், அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு தங்களை போன்ற வயதில் மூத்தவர்கள் வந்து குழந்தைகளை ஆசிர்வாதம் செய்தால் தங்க மோதிரம் தருவதாக ஆசை வார்த்தையும் கூறுவாராம். ஆனால் கழுத்திலும், காதிலும் நகை இருந்தால் மோதிரம் கிடைக்காது என கூறி மூதாட்டி அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கையில் வாங்கிக் கொள்வார்.

இதை நம்பிய பாட்டிக்களும் நகைக்கு ஆசைப்பட்டு நகைகளை கொடுத்தபின் இன்னொரு மூதாட்டியை அழைத்து வருவதாக சொல்லி அங்கிருந்து நகைகளுடன் தப்பிவிடுவாராம். அதுமட்டுமில்லாமல் கொள்ளையடித்த தங்க நகைகளை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த தனது பெண் தோழியிடம் பாதுகாப்பாக கொடுத்துள்ளார்.

விசாரணையின் அடுத்தகட்டமாக பெண் தோழியிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் திருமலையை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்