‘இரும்பு பைப்பின் இடையில் சிக்கிய கால்’.. ‘மீட்க வந்த தீயணைப்புப்படை’.. கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயம்பேடு மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு பைப்பின் இடையில் வியாபாரியின் கால் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் இரும்பு பைப்புகள் பதிக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை கால்நடைகள் உள்ளே வருவதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு தள்ளிவண்டியில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வரும் முருகன் (40) என்பவர் மார்க்கெட்டுக்கு வந்துள்ளார்.

நுழைவு வாயிலில் நடந்து வரும்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது கால் இரும்பு பைப்பின் இடையில் சிக்கியுள்ளது. அருகில் இருந்த தொழிலாளர்கள் சுமார் அரைமணி நேரமாக மீட்க போராடியும் முருகனை மீட்க முடியவில்லை. இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எந்திரம் மூலம் பைப்பை விரிவுபடுத்தி முருகனை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

CHENNAI, KOYAMBEDUMARKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்