"ஆவணம் அசல்.. பைக் போலி.. OLX-ல கண்டே பிடிக்க முடியாது!.. YOUTUBE-ஐ பார்த்து கத்துகிட்ட சுயதொழில்!' 'சென்னை-யில்' இப்படி ஒரு 'விசேஷ' திருடனா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை புறநகர் பகுதிகளில், இரு சக்கர வாகனங்களைத் திருடி அவற்றின், நம்பர் பலகை உள்ளிட்ட பல அம்சங்களை மாற்றி, அதற்கான வேறு அசல் ஆவணங்களை வேறு பைக்குகளில் இருந்து திருடி, OLXல் விற்பனை செய்து வந்த திருடனை போலீஸார் பிடித்துள்ளனர்.

Advertising
Advertising

சென்னை கொளத்தூர் என்விஎம் நகரைச் சேர்ந்த 33 வயதான கணேஷ், வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று திரும்பும் போது, தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததை அடுத்து, வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வந்தனர்.‌

மேலும் மாற்று உடையில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். ‌ இந்த நிலையில் நேற்று காலை வில்லிவாக்கம் பகுதியில் தனியார் துணிக்கடைக்கு எதிரில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருட முயற்சிப்பதை கவனித்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரித்தபோதுதான் அவர் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 30 வயதான ரமேஷ் என்பதும், அவர் வில்லிவாக்கம், கொரட்டூர், அயனாவரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது.

இதில் இவர் எந்த மாதிரி நூதன திருடர் என்றால் சில வாகனங்களிலிருந்து ஆ.சி. புத்தகம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை மட்டும் திருடி வைத்துக்கொள்வார். சிலரது வாகனங்களை மட்டும் திருடிக் கொள்வார். பின்னர் அந்த அசல் ஆவணங்களை இந்த வண்டிகளுடன் இணைத்து, அந்த ஆவணங்களுக்கு சொந்தமான வண்டி தான் இது என்பதுபோல், ஆவணத்தில் உள்ள நம்பர் படி, நம்பர் பிளேட்டையும், வண்டியின் நிறத்தையும் மாற்றிவிடுவார். பின்னர் இந்த வண்டியை புகைப்படம் எடுத்து OLX மூலம் இணைய தளத்தில் விற்பனை செய்துவிடுவார். இப்படி இவர் 12 வாகனங்களை விற்றுள்ளதாகவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.  இவ்வாறு இவரிடம்  இருந்து வாகனத்தை வாங்கியவர்கள் போலீஸாரிடத்தில் சிக்கினாலும் அவர்கள் ரமேஷ்க்கு போன் செய்யும் போது, ரமேஷ் அந்த சிம் கார்டை மாற்றி இருப்பார். இவ்வளவு ட்ரிக்ஸையும் யூடியூபைப் பார்த்து கற்றுக்கொண்டதாக ரமேஷ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்