“காலை 7-8 தான் மெயின் டைம்!”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் சில நாட்களாக ஒரே பாணியில் பெண்கள் விடுதியில் அரங்கேறிய கொள்ளை சம்பவங்கள் பதைக்கபதைக்க வைத்தன. 

இதில் காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள், பெண்களின் விடுதிகளுக்கே சென்று வைஃபை இணைப்பில் பிரச்சனை இருப்பதாகக் கூறி, அதைச் சரி செய்யும் விதமாக பேசி, அப்பெண்களை ஏமாற்றி பெண்களின் போன்களை ஒரே இடத்தில் சார்ஜ் போடச் சொல்லி நூதன முறையிலான திருட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருக்க வேண்டுமென ஹெல்மெட் போட்டுக்கொண்டே இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார் பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்த பாலாஜி(31)யை அண்ணா நகர் துணை கமிஷனர் முத்துசாமியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பாலாஜி இதுவரை இப்படி 34 போன்களை திருடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SMARTPHONE, CHENNAI, LADIES HOSTEL, WIFI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்