VIDEO: சென்னையில் வீடுபுகுந்து இளைஞர் கடத்தல்.. பரபரக்க வைத்த சிசிடிவி காட்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அம்பத்தூர் அருகே இளைஞர் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: சென்னையில் வீடுபுகுந்து இளைஞர் கடத்தல்.. பரபரக்க வைத்த சிசிடிவி காட்சி..!

சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை வாங்கிதருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஏமார்ந்த 3 இளைஞர்கள் திலீப்குமாரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து திலீப்குமாரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திலீப்குமாரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் திலீப்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடுபுகுந்து இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CCTV, CHENNAI, KIDNAPPED, YOUTH, AMBATTUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்