பைக்கில் சென்ற சார்பதிவாளர் கழுத்தை அறுத்த ‘மாஞ்ச நூல்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பைக்கில் சென்ற சார்பதிவாளரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (57). இவர் ராயப்பேட்டையில் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டு இருந்துள்ளார். கிண்டி சிட்டி லிங்க் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காற்றில் பறந்த வந்த மாஞ்சா நூல் ஒன்று வெங்கட்ராமனின் கழுத்தை அறுத்துள்ளது.
இதனால் வெங்கட்ராமனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஞ்சா நூல் பயன்படுத்த தடை உள்ள நிலையில், ஊரடங்கு சமயத்தில் பலரும் மாஞ்சா நூல் பட்டம் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் பெற்றோருடன் பைக்கில் சென்ற குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2 லட்சம்' ரூபாய் கடனை தீர்க்க... 'ஜாக்குவார்' காரை திருடிய நபர்!
- ஈரோட்டில் 2 ஆம் அலை கொரோனா தொற்றா!?.. சேலத்திலும் தலைதூக்கும் கொரோனா!.. மாவட்ட வாரியாக கொரோனா நிலை என்ன?
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது!.. பலி 197 ஆக உயர்வு!.. முழு விவரம் உள்ளே
- மூணு பைக்குல '8 பேரு'... கூடவே 3 'கத்தியும்' இருந்துருக்கு... அத 'வெச்சு' தான்... சென்னை கொள்ளையர்களின் 'பகீர்' பின்னணி!
- 'பிசினஸ்' பண்றானாம்ல 'பிசினஸ்'... "புடிச்சு உள்ள போடுங்க சார்"... 'யூடியூப்' பார்த்து திருடியவரின் 'பகீர்' பின்னணி!
- தமிழகத்தில் 2 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!.. உச்சத்தை நோக்கி நகர்கிறதா கொரோனா?.. முழு விவரம் உள்ளே
- ‘போன் வீட்லதான் இருக்கு’!.. ‘ஆனா அப்பாவை காணோம்’.. சென்னைக்கு தேடி வந்த மகனின் உருக்கமான பதிவு..!
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 13 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
- கொரோனாவ Control பண்ண... 'சென்னை' மெட்ரோவின் அசத்தல் பிளான்!