சென்னை: கழிவறையில் கிடந்த ஆணின் சடலம்.. 1 வருடம் கழித்து சிக்கிய அசாம் வாலிபர்.. திடுக்கிட வைத்த வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கழிவறை ஒன்றில் ஆணின் சடலம் கிடந்த வழக்கில் ஒரு வருடம் கழித்து அசாமை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “ஒரு ஓவர்ல 4 சிக்ஸ் போனாலும் பரவாயில்ல.. ஆனா இதை மட்டும் எப்படியாவது பண்ணிடுங்க”.. பவுலர்களுக்கு தோனி கொடுத்த வேறலெவல் அட்வைஸ்..!

சென்னை கோட்டை ரயில் நிலையம் அடுத்து முத்துசாமி பாலம் சந்திப்பு அருகே உள்ள பயன்பாடற்ற பொது கழிப்பிடம் உள்ளது. கடந்த ஆண்டு அங்கு அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து உயிரிழந்த நபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் சதீஷ்குமாரின் பெற்றோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த நபரின் உடைகளை வைத்து அடையாளம் காண முயன்றனர். இதன்பின்னர் சதீஷ்குமாரின் புகைப்படம் மற்றும் கழிவறையில் இறந்து கிடந்த நபரின் மண்டை ஓட்டினை தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்தனர். அதில் சதீஷ்குமாரின் உடலுடன் ஒத்துப்போனது தெரியவந்தது

இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் பெற்றோர் மற்றும் சகோதரியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு இறந்த நபரின் ரத்த மாதிரிகளை வைத்து ‘டிஎன்ஏ’ பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தியதில், இறந்த நபர் சதீஷ்குமார் தான் என்பது உறுதியானது. இதனை அடுத்து சதீஷ்குமார் உயிரிழந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று சதீஷ்குமாருடன் ஒரு வாலிபர் வரும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர் போலீசாரிடம் சிக்கவில்லை.

இந்த நிலையில், ஒரு வருட தீவிர தேடுதலுக்கு பிறகு கடந்த 30-ம் தேதி பாரிமுனை பகுதியில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பகதூர் (வயது 26) என்றும், இவன் சதீஷ்குமாரை கத்தியால் தாக்கிவிட்டு சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாரிடம் பகதூர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர், வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் வேலை கிடைக்காததால் நடைபாதை மற்றும் நண்பர்களுடன் தங்கி பாரிமுனை பகுதியில் தினக்கூலி அடிப்படையில் கிடைக்கும் வேலைகள் செய்து வந்துள்ளார். அப்போது சதீஷ்குமாருக்கு பகதூர் பழக்கமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இரவு பாரிமுனை பகுதியில் இருந்த பகதூரை, சதீஷ்குமார் ஒரு இடத்தில் வேலை இருப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோட்டை ரயில் நிலையம் நடை மேம்பாலம் அருகில் உள்ள பயன்பாடற்ற பொது கழிப்பிடத்திற்கு வந்துள்ளனர். திடீரென கத்தியை எடுத்த சதீஷ்குமார், பகதூரை மிரட்டி ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ்குமார் வைத்திருந்த கத்தியை பிடுங்கிய பகதூர், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் படுகாமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து சென்னையில் இருந்து ரயில் மூலம் தனது சொந்த மாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆவதால், தன்னை போலீசாருக்கு அடையாளம் தெரியாது என நினைத்து, பகதூர் மீண்டும் சென்னை வந்துள்ளார். இதன் பின்னர் பாரிமுனை பகுதியில் தங்கி வேலை செய்து வந்தபோது போலீசார் அவரை பிடித்துள்ளனர். இந்த நிலையில் பகதூர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CHENNAI, MAN, DEAD, TOILET, YOUTH, ARREST, சென்னை, சடலம், கழிவறை, அசாம் வாலிபர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்