‘முதலாளிக்கே’ கடன் கொடுத்த.. ‘சென்னை இளைஞருக்கு’ நடந்த பரிதாபம்.. ‘அதிரவைக்கும் வீடியோ, டைரி’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொடுத்த கடனை திரும்ப பெற முடியாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (32). திருமணமாகாத இவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் கேசியராக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை தன் முதலாளியான ஹோட்டல் உரிமையாளர் குமார் என்பவருக்கு ரூபாய் 5 லட்சம் பணத்தைக் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலருக்கு கடன் கொடுத்திருந்த செல்லதுரை கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்லதுரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கு முன் செல்லதுரை டைரி ஒன்றில் 7 பக்கங்களுக்கு தான் யாருக்கெல்லாம் கடன் கொடுத்துள்ளேன் என எழுதிவைத்துள்ளார். அத்துடன் கண்ணீருடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு வைத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “எல்லோரையும் நான் கஷ்டப்படுத்திவிட்டேன். கொடுத்த பணத்தை என்னால் திரும்ப வாங்க முடியவில்லை. எல்லோரையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். உடம்புக்குத் தேவையானதை சாப்பிடுங்கள். எனக்கு வேறு யோசனை தோன்றவில்லை. நான் உங்களோடு வாழ ஆசைப்பட்டேன். எனக்கு கிடைத்தது போல அம்மா, அப்பா யாருக்கும் கிடைக்காது” எனக் கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புரட்டி எடுத்த வயிற்று வலி'...'ஸ்கேனை பார்த்து பயந்த பெண்'...மாஸ் காட்டிய 'சென்னை மருத்துவர்கள்'!
- ‘விஷம் குடித்த 11-ம் வகுப்பு மாணவி’... ‘பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி’... 'கதறி புலம்பும் பெற்றோர்'!
- ‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..
- ‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’!.. ‘ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்’.. சென்னையில் பரபரப்பு..!
- 'பேங்க் லோன் வாங்கித் தாரோம்’... 'இளம் பெண்ணின் அழைப்பை நம்பி’... ‘சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி'!
- ‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..
- 'திடீரென கேட்ட அலறல் சத்தம்'...'ஷூ-வுக்குள் இருந்த ஆபத்து'...'சென்னை'யில் உயிருக்கு போராடும் பெண்!
- 'கையில் சிக்கிய சகோதரியின் கணவன்'...'உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்த பெண்'...சென்னையில் பரபரப்பு!
- ‘3வது மாடியில்’ இருந்து தவறி விழுந்த ‘2 வயது குழந்தை’.. நொடியில் ‘சாமர்த்தியமாக’ அக்கம்பக்கத்தினர் செய்த காரியம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
- வங்கிக்குள் திடீரென ‘துப்பாக்கி, கத்தியுடன்’ நுழைந்து.. ‘தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு’.. ‘கோவையில்’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..