'கிரெடிட் கார்டு மோசடி மட்டுமில்ல'.. 'சினிமா ஆசையில் வரும் இளம் பெண்களை..'.. அதிரவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பி.ஏ.ஆங்கில இலக்கியம் படித்த சென்னையைச் சேர்ந்த 52 வயதாகும் பெண்மணி ஒருவர், தேனாம்பேட்டையைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வேலையைத் துறந்து, ஆங்கில நாளிதழின் விளம்பரத்தைப் பார்த்து நேர்முகத் தேர்விற்கு சென்றுள்ளார்.

அங்குதான், ரேச்சல் என்பவரின் மூலமாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆண்டனியை அந்த பெண்மணி சந்தித்திருக்கிறார். பயிற்சி மாத காலம் என்று சொல்லி 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆண்டனி அந்த பெண்மணியை வேலைக்கு எடுத்ததோடு, டி.நகரில் உள்ள அலுவலகத்தில், பணி நேரத்தில் அந்த பெண்மணியின் செல்போன் மற்றும் கிரெடிட் கார்டினை வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். இதற்குக் காரணம் கேட்ட அந்த பெண்மணியிடம், பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதும் வங்கிப்பரிவர்த்தனையும் இருக்க வேண்டாம் என்பதால் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், நடந்ததோ வேறு, கொஞ்ச நாட்களில் கிரெடிட் கார்டு மூலமாக 10 லட்சம் கடன் பெறப்பட்டதும், அந்த பணத்தை ஆண்டனி தன்னுடைய அக்கவுண்ட்டிற்கு மாற்றிக்கொண்டதும், அதற்காக அந்த பெண்மணியின் போனில் வந்த ஓடிபி நம்பரை பயன்படுத்திக் கொண்டதும் தெரியவர, அதிர்ந்த அப்பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நுனி நாக்கில் ஆங்கிலம், டிப்டாப் உடைகள், பாதுகாப்பாக 3 பவுன்ஸர்கள் என்றிருக்கும் ஆண்டனி மீது இது மாதிரியான மோசடி புகார்களோடு, சினிமா ஆசையில் நடிக்க வரும் இளம் பெண்களை போட்டோ ஷீட், வீடியோக்களை எடுத்தும் அவர்களை மிரட்டியும், வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறியும் பணம் பறித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

FRAUDSTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்