‘மதுவுடன் டீசலைக் கலந்து குடித்துவிட்டு’.. ‘மனைவியின் சடலத்தோடு தூங்கிய இளைஞர்’..‘சென்னையில் தம்பதி எடுத்த விபரீத முடிவு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் சடலத்தோடு இளைஞர் ஒருவர் மதுவுடன் டீசலைக் கலந்து குடித்துவிட்டு ஒரு மணி நேரம் மயங்கிக் கிடந்துள்ளார்.
சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரஞ்சித் (24) - ரஞ்சனி (எ) சரண்யா (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களுடைய வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்துள்ளனர். அப்போது படுக்கையறையில் படுத்திருந்த ரஞ்சித்தும், சரண்யாவும் நீண்ட நேரமாக கூப்பிட்டும் எந்த அசைவும் இன்றி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் சரண்யா சடலமாகக் கிடந்துள்ளார். அவருடைய கழுத்தில் காயங்களும், அறையில் தூக்கு போட்டுக்கொண்டதற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. அவருக்கு அருகில் மயங்கிய நிலையில் இருந்த ரஞ்சித்தை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் போலீஸார் ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் சரண்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 13ஆம் தேதியும் வழக்கம்போலவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலை வெளியே சென்ற ரஞ்சித் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சரண்யா தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரஞ்சித் மது வாங்கி வந்து அதில் டீசலைக் கலந்து குடித்துவிட்டு மனைவியின் சடலத்தோடு படுத்துக்கொண்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் அவர் அப்படியே மயங்கிக் கிடந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உங்க மேல கம்ப்ளெய்ண்ட் வந்துருக்கு.. கொஞ்சம் வர்றீங்களா?'... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த போன்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘சென்னை மாநகரப் பேருந்தை முந்த முயன்றவர்’.. ‘நொடியில் சக்கரத்தில் சிக்கி நடந்த பயங்கரம்’..
- 'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?
- 'எனக்கு மாதவிடாய்.. அவளயாச்சும் காப்பாத்தி அழச்சுட்டு போங்க'.. சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சித்ரவதைகள்!
- 'சாதி மாறி கல்யாணம்’... ‘ஒரே நாள்தான்’... ‘கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பயங்கரம்'!
- ‘நெருங்கும் வடக்கிழக்கு பருவமழை’... ‘9 மாவட்டங்களில்’... ‘அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு’... விவரம் உள்ளே!
- ‘ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியோடு வந்த’.. ‘இளைஞரின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோய் நின்ற சென்னை போலீஸார்’..
- ‘அப்பா சொல்லிக் கேக்காம இருக்க முடியல’.. ‘குழந்தைகளுடன் விஷம் சாப்பிட்ட மகள் வாக்குமூலம்’..
- 'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா?'... விவரம் உள்ளே!