68 வயது முதியவரால்... 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... உறைந்து நின்ற பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 68 வயது முதியவர், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியைச்  சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி  (68). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், அரசியல் பிரமுகராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அதேப் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி இந்திராணி என்பவரின் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை, ரவி தனது வீட்டின் மேல்தளத்திற்கு அழைத்துள்ளார். பின்னர் அங்கு சிறுமிக்கு தனது மொபைலில் ஆபாசப் படங்களை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்யமுயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, பக்கத்து வீட்டில் வசித்த ஒருவர், இதனைப் பார்த்து, குழந்தைகள் உதவி மையம் 1098-க்கு தகவல் தெரிவிக்க அவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு விசாரித்த போது, கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து இது போன்று துன்புறுத்தி வந்ததும், இது பற்றி வெளியில் கூறக் கூடாது என சிறுமியை ரவி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ந்து போயினர். பின்னர் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் ரவியை கைது செய்த போலீசார்,  ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAICHILDABUSE, HARRASSED, MAN, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்