வீட்டிலிருந்து வந்த ‘துர்நாற்றம்’.. அழுகிய நிலையில் கிடந்த ‘அண்ணன், தங்கை’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வீட்டுக்குள் அண்ணன், தங்கை அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக் 115-வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் ஆண், பெண் இரண்டு நபர்களின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. படுக்கையறையில் உள்ள மெத்தையில் ஆணின் சடலமும், மற்றொரு அறையில் பெண்ணின் சடலும் கிடந்துள்ளது. இவர்களுக்கு 45 வயதிலிருந்து 50 வயதிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இரு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் சோதனை செய்தபோது சின்னத்திரை நடிகர் சங்கம் அடையாள அட்டை இருந்துள்ளது.
இதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்கள் அண்ணன், தங்கையான ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி என்பது தெரியவந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், இதுவரை இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அம்மா இல்லாத குழந்தை’!.. காய்ச்சலால் வெளிச்சத்துக்கு வந்த கொடுமை.. சென்னையை அதிரவைத்த ‘ஆன்லைன்’ புகார்..!
- 'தம்மாத்துண்டு மாஸ்க்... சும்மா நினைக்காதீங்க!'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்!
- திருச்சி மற்றும் தூத்துக்குடியில் தலை தூக்குகிறதா கொரோனா?.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் 'இளம் வயதினரை' குறிவைக்கிறதா கொரோனா!?.. ஒரே நாளில் 1,438 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'இது ‘குற்றம் 23' ஸ்டைல்'... 'என்னோட விந்தணு இல்லன்னா குழந்தை வந்திருக்குமா'?... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- ‘கிரிக்கெட்டில் தகராறு’!.. ‘1 கிமீ விரட்டிக் கொலை’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- 3 லட்சம் 'காசு' போட்டு... 6 மாசம் 'கஷ்டப்பட்டு' இருக்கேன்... பொதுமக்களின் செயலால் 'கதறியழுத' மனிதர்!
- தமிழகத்தில் அதிரவைத்த 'கொரோனா' பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... 'ஒரே' நாளில் '12 பேர்' பலி... முழு விவரம் உள்ளே!
- 'பழத்துல ஊசிய இறக்குறது போல பேசுவான் சார்'...'கணவரோடு டைவர்ஸ்'... மேட்ரிமோனி மூலம் சென்னை இளைஞர் விரித்த வலை!
- 'ஃபிரிட்ஜ்' கண்ணாடி 'ஒடஞ்சு' போச்சு... அப்பா, அம்மாக்கு தெரிஞ்சா 'அவ்ளோ' தான்... மனதை 'நொறுங்க' வைக்கும் 'சிறுவனின்' விபரீத முடிவு!