"உங்களுக்கு சால்வை'ய போடணும்.." சென்னையில் கட்சி அலுவலகம் அருகே நின்ற திமுக வட்ட செயலாளர்.. தனியாக அழைத்து நடந்த கொடூரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : கட்சி அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த திமுக வட்ட செயலாளருக்கு, இரவு நேரத்தில் நடந்த கொடூரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"உங்களுக்கு சால்வை'ய போடணும்.." சென்னையில் கட்சி அலுவலகம் அருகே நின்ற திமுக வட்ட செயலாளர்.. தனியாக அழைத்து நடந்த கொடூரம்
Advertising
>
Advertising

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் செல்வம். அதே பகுதியின், திமுக வட்ட செயலாளராகவும் உள்ளார்.

அது மட்டுமில்லாமல், விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 188 ஆவது வட்டத்தின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராகவும் இவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

மர்ம கும்பல்

இந்நிலையில், நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன் செல்வம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு சால்வை அணிவிப்பதன் பெயரில், அங்கு ஒரு கும்பல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சால்வை அணிவது போல பாவித்து, செல்வத்தினை சரமாரியாக அந்த கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், சில நொடிகளிலேயே அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

பெரும் பரபரப்பு

இதில், பலத்த காயமடைந்த செல்வத்தை, அங்கிருந்தவர்கள், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வரும் உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடவிருந்த ஆளுங்கட்சியின் உறுப்பினர், படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் போட்டி தான் காரணம்?

தொடர்ந்து, செல்வம் கொலை செய்யப்பட்டதன் பெயரில், போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில், தொழிலில் ஏற்பட்ட போட்டி தான் இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள்  வெளியாகியுள்ளன. அதே வேளையில், கோஷ்டி மோதல் ஏதேனும் இந்த கொலைக்கு காரணமா என்ற நோக்கிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி தேர்தல்

மேலும், செல்வத்தின் பெயர், சென்னை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில்.ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், படுகொலை செய்யப்பட்டிருப்பது, கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

DMK, CHENNAI, SECRETARY, ELECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்