சென்னைவாசிகள் கவனத்துக்கு.. டிக்கெட் எடுக்கும்போது ‘மறக்காம’ இதையும் எடுத்துட்டு போங்க.. அமலுக்கு வந்த ‘புதிய’ கட்டுப்பாடுகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை புறநகர் ரயிலில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னைவாசிகள் கவனத்துக்கு.. டிக்கெட் எடுக்கும்போது ‘மறக்காம’ இதையும் எடுத்துட்டு போங்க.. அமலுக்கு வந்த ‘புதிய’ கட்டுப்பாடுகள்..!
Advertising
>
Advertising

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளில் பயணம் செய்ய மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Chennai local train announce new covid restrictions

இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க இன்று (10.01.2022) முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Chennai local train announce new covid restrictions

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சீசன் டிக்கெட் எடுத்து புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இன்று முதல் தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதேபோல் சாதாரண பயணிகளும் தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சாதாரண பயணிகளின் டிக்கெட்டில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள 12 இலக்க எண் அச்சிடப்படும். அதேபோல் சீசன் டிக்கெட் எடுப்பவர்களின் டிக்கெட்டில் 4 இலக்க கொரோனா சான்றிதழ் எண் பதிவு செய்யப்படும்.

சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் போது அதே எண் மீண்டும் அச்சிடப்படும். மேலும் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

CHENNAI, LOCALTRAIN, COVIDRESTRICTIONS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்