VIDEO: என்ன பார்த்து 'ஏய்'னு சொல்றியா...!? 'மவனே... உன் யூனிஃபார்ம் கழட்டிடுவேன்...' யாருக்கிட்ட...? 'போலீசாரிடம் எகிறிய பெண்...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா ஊடரங்கு நேரத்தில் வெளியே வந்த பெண் ஒருவர் தன்னை வழக்கறிஞர் எனக் கூறி போலீசாரை திட்டும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினார். கடைசி நாளான இன்று சமூகவலைத்ததில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

ஊரடங்கின் போது அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதித்துள்ளது. அதோடு, தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த இரண்டு பெண்களை போலீஸார் விசாரித்துள்ளனர். அதில் ஒருவர் காவல்துறையினருக்கு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் காவலர்களை ஒருமையில் பேசத்தொடங்கினார்.

இந்த சம்பவத்தை, போக்குவரத்து காவலர்கள் வீடியோவாக எடுத்துள்ளுனர். அதில், 'என்ன பார்த்து ஏய்-ன்னு சொல்றியா.. இப்ப காட்டடா... மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன் ஜாக்கிரதை.. என் கார் ஏன் நிறுத்திற.. ஏய் எல்லா காரையும் நிப்பாட்டுன்னு..' சாலையில் தொடர்ந்து ஒருமையில் போலீஸாரை திட்டியுள்ளார்.

அதோடு பேசும் போது மாஸ்க் கும் அணியவில்லை. அதனால், போலீஸார் அவரை மாஸ்க் அணிய சொல்லியதில், மேலும் ஆத்திரத்தில் சத்தம் போட தொடங்கினார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்