'சோதனைக்கு மேல் சோதனை... இப்படியே போனா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா'!?.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்!.. திணறும் சென்னை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பேடு மார்க்கெட்டில் புதிதாக 50 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னையில் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தையும், மாதவரம் பஸ் நிலையத்தில் பழ சந்தையும், வானகரத்தில் பூ சந்தையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடியும், 28-ஆம் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், தினந்தோறும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் கடந்த 10-ஆம் தேதி வரையிலான 22 நாட்களில் 2800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும்போது, "சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கடந்த 22 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில், 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது 1.5 சதவீதமாகும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று இருக்கிறதா? என்று அந்தந்த மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகம்: மேலும் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! சென்னையில் மொத்த பாதிப்பு, தமிழகத்தில் பலி எண்ணிக்கை! முழு விபரம்!
- 'குளிர் காலம் வந்திருச்சு... கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா'?.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
- 'இனிமே தான் சவாலான காலகட்டம்'... தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து... அமைச்சர் விஜயபாஸ்கர் 'பரபரப்பு' தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்?!!'... 'மாநகராட்சி தகவல்!'...
- '7 மாசம் ஆச்சு'... 'பிறந்த குழந்தையை பாக்க முடியலியே'... 'பரிதவித்த வங்கி மேலாளர்'... நெகிழ வைத்த சம்பவம்!
- 'தமிழகத்தின் இன்றைய (09-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- குட் நியூஸ்...! 'கொரோனா தடுப்பூசியிலே அது தான் இப்போ லீடிங்...' - இது முக்கியமா அவங்களோட உடம்புல தான் நல்ல பலன் தருது...!
- "கொரோனா காலத்தில் நர்சாக சேவை புரிந்த நடிகைக்கு என்ன ஆச்சு?".. ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியான ‘வைரல்’ பதிவு!
- "இப்படியே போச்சுனா"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா?!!'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...