'10 டன் வாழைப்பழத்தையும் இத தெளிச்சுதான் பழுக்க வெச்சிருக்காங்க'.. சென்னையை அதிரவைத்த கோயம்பேடு மார்க்கெட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விதிகளை மீறி பழக்க வைக்கப்பட்டதாக கோயம்பேடு சந்தையில் 10 டன் வாழைப் பழங்களை  உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்றைய தினம் பறிமுதல் செய்ததோடு, அவற்றை அழித்தனர்.

பொதுவாகவே பழங்களில் எல்லா காலங்களில் சீசன் இருக்கும் பழமாக வாழைப்பழம் பார்க்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை பல இடங்களுக்கு கோயம்பேடு சந்தையில் களமிறங்கும் வாழைப்பழங்களே விநியோகிக்கப்படுகின்றன. அத்தகைய வாழைப்பழம் இன்றி பலரும் பகல்-இரவு விருந்துகளை உண்பதில்லை.

இப்படி ஒரு சூழலில்தான் விதிகளை மீறி வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப் படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஏ.ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் 10 பேர் திடீரென கோயம்பேடு சந்தைக்குச் சென்று அதிகாலை 3.30 மணி அளவில் 34 கடைகளில் நடத்திய அதிரடி சோதனைகளில் வாழைப்பழங்களின் மீது எத்திலீன் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்படுவதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட 3 கடைகளில் இருந்து மட்டும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 டன் வாழைப்பழங்களை பறிமுதல் செய்து, கோயம்பேடு வளாகத்தில் உள்ள காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் கிடங்கில் கொட்டி அழித்தனர். இவற்றில் சில வாழைப்பழங்கள் சாம்பிள்களாக ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் சம்மந்தப்பட்ட கடைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆய்வுகள் இன்னும் 10 நாட்களுக்குத் தொடரும் என்றும், இப்படி பழுக்க வைக்கப்படும் பழங்களால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

KOYAMBEDU, MARKET, BANANA, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்