‘பயணிகள் ரொம்ப கம்மி’... ‘இந்த மார்க்கத்தில் மட்டும்’... ‘டிசம்பர் 2 ஆம் தேதி முதல்’ ‘ரத்து செய்யப்படும் சிறப்பு ரயில்’... தெற்கு ரயில்வே அதிரடி...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை-கோவை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும், சதாப்தி சிறப்பு ரயில்கள் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா நோய்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்களின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவையிலிருந்து சென்னை மற்றும் மயிலாடுதுறைக்கு செப்டம்பர் 7-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் கோவை-சென்னை வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்கள் டிசம்பர் 2-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்டம் ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை-சென்னை (ரயில் எண்: 06027) சென்னை கோவை (ரயில் எண்: 06028) ஆகிய 2 சதாப்தி ரயில் சிறப்பு ரயில்களில் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால் டிசம்பர் 2-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன. நவம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு ரயில்கள் இயங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்