சென்னையின் ஆன்மாவை புரட்டியெடுக்கும் கொரோனா!.. டாக்டர் உட்பட 10 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு டாக்டர் உள்பட 10 பேர் இன்று பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
Advertising

சென்னையில் கீழ்பாக்கத்தில் வசித்து வந்த 70 வயது டாக்டர் ஒருவர் மின்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் ஒருவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சென்னை சூளையை சேர்ந்த முதியவர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அண்ணா சாலையை சேர்ந்த 66 வயது மூதாட்டி உயிரிழந்து உள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஐ.சி.எப். பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

இதனால், சென்னையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்