'சென்னையில இதெல்லாம் சாப்பிட்டா போதும்'...'செம உற்சாகமா இருக்கலாம்'...பிரதமர் மோடி பெருமிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறும் நிலையில், அதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார்கள்.

இதனிடையே விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, 'சென்னைக்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியொரு வரவேற்பு அளித்த உங்களுக்கு நன்றி' என கூறினார். இதனைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி சென்ற மோடி, அங்கு நடைபெற்ற விழாவில் இந்திய -சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ''தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது. சென்னையின் இட்லி, வடை ஆகிய உணவுகளை காலையில் சாப்பிட்டால் உற்சாகம் பிறக்கும். இது எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினருக்கு அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. இங்கு இளைஞர்கள் பலர் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கபூர் கல்வி அமைச்சருக்கு நன்றி'' என பிரதமர் மோடி பேசினார்.

NARENDRAMODI, CHENNAI, IIT, IDLI DOSA, IIT MADRAS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்