மனைவியின் கழுத்தில் இருந்த மார்க்.. 'Autopsy'ல் தெரிய வந்த உண்மை.. கலைந்து போன கணவரின் நாடகம்.. அதிர்ச்சி பின்னணி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பிராட்வே புத்தி சாகிப் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ரகுமான். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக இவர் பணிபுரிந்து வருகிறார்.

அப்துல் ரகுமானுக்கு, யாஸ்மின் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக யாஸ்மின், தூக்கத்தில் இருந்து எழாமல், மயக்கம் அடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
மயக்கம் அடைந்த மனைவி
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகே அமைந்துள்ள மருத்துவமனைக்கு யாஸ்மினை கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், யாஸ்மின் ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மின் உடலை பிரேத பரிசோதனைக்கு வேண்டி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்
இதனைத் தொடர்ந்து, யாஸ்மினின் மரணம் தொடர்பாக, பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. அதாவது, யாஸ்மின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பது உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பிறகு, கணவர் அப்துல் ரகுமான் மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவரிடம் தீவிர விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
மனைவியின் உறவு
அப்போது, தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு, மயக்க மருந்தை கொடுத்து மனைவி உறக்கத்தில் மயக்கம் கொண்டதாக கூறி அப்துல் நாடகமாடியது தெரிய வந்தது. தொடர்ந்து, இது பற்றி அப்துல் ரகுமானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்னும் பல தகவல்கள் தெரிய வந்தது. மனைவி யாஸ்மினுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த ரகுமான், அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆத்திரத்தில் கணவர்
இருந்த போதும், கணவரின் பேச்சைக் கேட்காமல், யாஸ்மின் தொடர்ந்து அந்த நபருடன் உறவில் இருந்து வந்த நிலையில், அடிக்கடி இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த ரகுமான், அவருக்கு பாலுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் பிறகு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த யாஸ்மினை ரகுமான் கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி, யாஸ்மினின் தாயார் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அப்துல் ரகுமானை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோவில் வாசலில் பிளாஸ்டிக் பை.. "திறந்து பார்த்தா.." .. மனைவி செய்த காரியம்.. ஊரையே நடுங்க வைத்த பதைபதைப்பு சம்பவம்!
- மாமனாருடன் ஒரே அறையில் இருந்த மனைவி.. கையும் களவுமாக பிடித்த கணவன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!
- மயங்கிதான் கெடக்கான்னு நினைச்சோம்.. ஆனா இப்படி ஆகும் நினைக்கல.. மதுபோதையில் நண்பனுக்கு நடந்த கொடூரம்..!
- "'தோனி' மனைவியா இருக்குறதால படுற கஷ்டம்.." மனம் திறந்த சாக்ஷி.. "இந்த ஒண்ணு தான் ரொம்ப கொடுமை"
- சாப்பிட கூப்பிட்டும்.. கண்டுக்காம இருந்த கணவன்.. கோவத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்.. சென்னையில் பரபரப்பு..!
- மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணய கைதி.. புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்
- தினமும் குடிச்சிட்டு வந்து ஒரே தொல்லை.. வீட்டில் கேட்ட கணவனின் அலறல் சத்தம்.. மனைவி செய்த பரபரப்பு காரியம்..!
- தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி.. கோபத்தில் டிராக்டர் எடுத்துக்கிட்டு காதலன் செஞ்ச காரியம்..!
- புருஷன் போலீசில் சிக்கிட்டா நாம ஜாலியா இருக்கலாம்.. பெண் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கியது எப்படி?
- முதல் கணவரை பாக்க ஆசைப்பட்ட மனைவி.. கிச்சனில் இருந்து வேகமாக வந்த 2வது கணவர்.. பதைபதைப்பு சம்பவம்