அப்பா, அம்மாவை பாத்துக்க முடியலைன்னா அவங்க கொடுத்த சொத்து எதுக்கு?.. முதியோர் இல்லத்தில் தவித்த பெற்றோர்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சொத்தை பெற்றுக்கொண்டு தாய் மற்றும் தந்தையரை கவனிக்க தவறிய மகனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சொத்துகளை எழுதி வைக்கும்போது கவனமாக இருக்கும்படியும் பெற்றோர்களுக்கு நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | படிக்கலைன்னு திட்டிய அப்பா.. வீட்டைவிட்டு ஓடிப்போன மகன்.. ஒன்றரை வருஷம் கழிச்சு நடந்த அதிசயம்.. வாழ்க்கையை மாற்றிய ஆதார்கார்டு..!

சென்னையை சேர்ந்த வயதான தம்பதியர், தனது மகன் சொத்துக்களை பெற்றுக்கொண்டு தற்போது தங்களை கவனிப்பது இல்லை எனவும், அவருக்கு எழுதிக்கொடுத்த சொத்து பத்திரம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தினை நாடியுள்ளனர். கணவர் ஓய்வுபெற்ற விமான படை அதிகாரி. மனைவி செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்திருக்கின்றனர். மூத்த மகன் தற்போது ஆஸ்திரேலியாவில் நல்ல வேலையில் இருக்கிறார்.

இந்த தம்பதியின் இளைய மகனது உடல்நிலை மோசமானதால் மொத்த சொத்தையும் மூத்த மகனுக்கு எழுதி கொடுத்திருக்கின்றனர். துவக்கத்தில் தனது தாய் பெயரில் 3 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளார் அவர். ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியிருக்கிறது. பெற்றோரிடம் பேசுவதையே அவர் நிறுத்திவிட வயதான நிலையில் இருவருக்குமே உடல்நலம் குன்றியுள்ளது. மகனிடம் உதவி கேட்டும் அவர் செய்யாத காரணத்தினால், தனது கணவரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார் மனைவி.

இதற்காக தனது நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டியுள்ளார் அவர். அப்போது வீட்டை காலி செய்துகொடுக்க வேண்டும் என மூத்த மகன் கேட்கவே, வயதான தம்பதியர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதனையடுத்து மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்திருக்கின்றனர் தம்பதியர். இதனால் ஆத்திரமடைந்த மகன், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்து 8-வது உதவி பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில், 3-வது கூடுதல் பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மகன் மேல்முறையீடு செய்ய, அங்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றனர் வயதான தம்பதியர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா," பெற்றோருக்கான கடமை உணர்வு பிள்ளைகளுக்கும் உண்டு. ஆனால், பெற்றோரை முதுமையில் கவனிக்க தவறுவது வேதனையின் உச்சம். இந்த வழக்கில் மகன் செய்திருப்பது ஈவு, இரக்கமற்றது. கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துகளை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு" என தீர்ப்பளித்தார்.

மேலும், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதிக்கொடுக்கும்போது முதுமையில் தங்களை கவனிக்க வேண்டும் என்ற விதிமுறையுடன் எழுதிக்கொடுக்க வேண்டும். எனவும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Also Read | பி. காம் படிப்பு.. முன்னணி நிறுவனத்தில் வேலை.. எல்லாத்தையும் விட்டுட்டு இளைஞர் எடுத்த ரூட்.. அவங்க மனைவி குடுத்த ஐடியா தான் காரணமாம்!

CHENNAI, CHENNAI HIGH COURT, JUDGE, ADVICE, PARENTS, PROPERTY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்