பைக்ல 'அந்த பார்ட்ட' கழட்டிட்டு ஓட்டுனா... '500 ரூபாய் அபராதம் ...' 'வாரன்டி' கெடையாதுன்னும் சொல்லிடுங்க...! - சென்னை உயர் நீதிமன்றம் 'அதிரடி' அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இனி இரு சக்கரவாகனங்களின் கண்ணாடிகளை அகற்றுபவர்களுக்கு புது விதிமுறைகளை அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அனைத்து வாகனகளிலும் சாலையில் பின்னால் வரும் வாகனங்களை பார்த்து ஓட்ட பக்கவாட்டு கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில்  இந்தக் கண்ணாடிகள் காணப்படுவதில்லை.

இதை எதற்காக அகற்றுகின்றனர், அல்லது இதன் பயன் தெரியவில்லையா என்பது கூட சந்தேகம். இவ்வாறு அகற்றப்படும் கண்ணாடிகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த மனு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டது

இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி, வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதோடு, தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டப்படி, கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தேவைப்பட்டால், இதுசம்பந்தமாக வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்