'ஒரு நாள் மழைக்கே இப்படியா'?...'ஏரி'யாக மாறிய முக்கிய சாலை'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே சென்னையின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது, சென்னை மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்துள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில் மழை பெரிய அளவில் பெய்யாததால், தற்போது பெய்திருக்கும் மழை சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே நேற்று இரவு பெய்த மழைக்கே சென்னை நகரின் முக்கிய சாலைகள்  வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அண்ணா சாலை, வேளச்சேரி சாலை, தாம்பரம் முடிச்சூர் சாலை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இந்நிலையில் சென்னைவாசிகள் பலரும் ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே தங்களது பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளதாக ட்விட்டரில் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருவில், சுமார் 400 பேர் வசிக்கும் பகுதி தற்போது  வெள்ளக்காடாக மாறி இருப்பதாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் வீட்டின் முன்புறம் இருக்கும் சாலை, மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பலரும் தங்களது பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

RAIN, HEAVYRAIN, TWITTER, CHENNAI RAIN, 2015 FLOODS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்