VIDEO: திடீர் திடீரென 'முறிந்து' விழுந்த மரங்கள்... இதென்ன ரோடா இல்ல நீச்சல் குளமா?... 'தெறிக்க' விட்ட மழையால் ஆடிப்போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்ததால், மரங்கள் முறிந்து விழுந்து ரோட்டில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 28 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் காலையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், ஆவடி , திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், வளசரவாக்கம், போரூர், சைதாப்பேட்டை, மதுரவாயல், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், மேடவாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

சென்னையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இதனால், சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த சில வாரங்களாகவே மழையானது மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே மிதமாக பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்