ADMK தலைமை அலுவலக சீல் அகற்ற கோரிய வழக்கு.. "சாவிய இவர்கிட்ட ஒப்படைங்க.."சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் சென்னை உய்ரநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Breaking: இலங்கையின் புதிய அதிபர் யார்.?.. தேர்தல் முடிவுகளை வெளியிட்டது நாடாளுமன்றம்..!

பொதுக்குழு

அதிமுக-விற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது நீதிமன்றம் வரையில் சென்றது.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே பொதுக்குழு நடைபெற்ற அன்று சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார் ஓ.பன்னீர் செல்வம். தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் அசாதரண சூழ்நிலை நிலவியது. அப்போது அங்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார்.

வழக்கு

இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் அதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "அவர் மனைவிக்கு ஒரு மெசேஜ் தான் அனுப்புனேன்.. அடி பின்னிட்டாரு.. காப்பாத்துங்க சார்".. போலீசிடம் பாதுகாப்பு கேட்ட நபர்.. போலீஸ் போட்ட "நச்" கமெண்ட்.. வைரல் ட்வீட்..!

OPANNEERSELVAM, EDAPPADI K. PALANISWAMI, CHENNAI, CHENNAI HC ORDER, AIDMK OFFICE, ADMK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்