'முதல்ல பிரண்ட்ஸா தான் இருந்தோம்'... 'போக போக காதலா மாறிடிச்சு'... 'சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்கள்'... அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இணைத்து வாழ விரும்பிய இரண்டு இளம்பெண்கள் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த இருபெண்கள் முதலில் தோழிகளாகப் பழகி வந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவு செய்து அவர்கள் பெற்றோரிடத்தில் இதனைத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், இருவரின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னை வந்த பெண்கள் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர். மேலும் பாதுகாப்புக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தனர். அந்த வழக்கில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால், வழக்குக்குத் தொடர்புடைய நபர்கள், காவலர்கள் என அனைவரையும் ஆஜராகுமாறு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்கை விசாரித்தார்.

இதுதொடர்பாக பேசிய நீதிபதிகள்,  ''விசாரணையில், LGBTQIA என்று சொல்லப்படும் ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். மேலும் மனுதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கருத்துகளை விவரமாகத் தீர்ப்பில் சேர்க்க ஏதுவாக, அனைவரிடமும் உளவியல் கருத்துக்களைப் பெற வேண்டியது அவசியம்.

எனவே உளவியல் நிபுணர் வித்யா தினகரன் என்பவரை நியமித்து, உளவியல் ரீதியாக அணுகி அதன் அறிக்கையை ஏப்ரல் 26ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்