'தல நீங்க வேற லெவல்'... 'கின்னஸ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ'... சென்னை சிறுவனை பாராட்டிய 'பியர் கிரில்ஸ்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சிறுவன் ஆதவ் சுகுமாரின் கின்னஸ் சாதனையைப் பார்த்த பியர் கிரில்ஸ் ‘வெல் டன் ஆதவ்’ என பாராட்டி கமெண்ட் செய்திருக்கிறார்.

ஹூலா ஹூப்பிங் (hula hooping) எனப்படும் கனமான வளையத்தை உடலில் வைத்துச் சுழற்றுவதில் கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆதவ் சுகுமார். ஆனால் அவர் அச்சாதனையைப் பிறர் போலச் சமனான தளத்தில் செய்துவிடவில்லை.

சிறுவன் ஆதவ் சுகுமார் இடுப்பில் வளையத்தைச் சுழல விட்டவாரே 50 படிகளை அதுவும் 18.28 நொடிகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் சாதனை குறித்த வீடியோவும் பகிரப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த சாதனை அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. மிகக் கடினமான இந்த சாதனையைச் செய்வதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறுவன் ஆதவ் சுகுமார் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி படைக்கப்பட்ட இந்த சாதனையைச் சமீபத்தில் அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம், அவர்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆதவ் சுகுமாரின் கின்னஸ் சாதனை குறித்த வீடியோவை பகிர்ந்திருக்கிறது.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வைரலாகியுள்ள ஆதவ் சுகுமாரின் வீடியோ, டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் எனும் சாகச நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சாகச பிரியர் பியர் கிரில்ஸின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சென்னை சிறுவன் ஆதவ் சுகுமாரின் கின்னஸ் சாதனையைப் பார்த்த பியர் கிரில்ஸ் ‘வெல் டன் ஆதவ்’ எனப் பாராட்டி கமெண்ட் செய்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்