கிண்டி சில்ட்ரன்ஸ் பார்க்கில்... புதிய அனிமேஷன் ஷோ... கட்டணம் திடீர் உயர்வு... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை கிண்டியிலுள்ள சிறுவர் பூங்காவில் அனிமேஷன் ஷோ கொண்டுவரப்பட்டுள்ளதால், அதற்குரிய பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் நாட்டிலேயே 8-வது சிறிய தேசிய பூங்கா, அமைந்துள்ளது. இந்த பூங்காவில், 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 14 பாலூட்டி சிற்றினங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருக்கின்றன. இந்த பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாட, கண்டு ரசிக்க ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளாதால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி மற்ற நாட்களும் குழந்தைகளுடன் பெற்றோர் நாள்தோறும் வந்து செல்வர்.

இந்நிலையில் இந்த சிறுவர் பூங்காவில் அனிமேஷன் ஷோ கொண்டு வரப்பட்டுள்ளதால், அதற்குரிய பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. வன விலங்குகளுடன் நாம் திரையில் தோன்றும் வகையில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்படுகிறது. ‘3 டி அனிமே‌ஷன்’ பரிமாண தோற்றத்தில் விலங்குகளுடன் நம்மை காட்சிப்படுத்தும் வகையில், அரங்குக்குள் நாம் சென்றதும் நம்மை நோக்கி கேமரா படம் பிடித்து, வன விலங்குகளுடன் நாம் இருப்பது போல் திரையில் ஒளிபரப்புகிறார்கள். இதனைப் பார்த்து மகிழ இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதற்கு தனியாக சிறுவர்களுக்கு நுழைவுக் கட்டணம் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்கிறது. இதேபோல் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

GUINDY, CHENNAI, PARK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்