தமிழ்நாட்டுல இல்லாத குக்கரா துபாயில விக்குது? டவுட் ஆன அதிகாரிகள்.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: ரைஸ் குக்கரிலும், உள்ளாடைகளிலும் தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் தங்கக் கடத்தல் சம்பவங்கள்:
பொதுவாக இந்தியாவில் அதிகம் தங்க கடத்தல் நடைபெறும் மாநிலம் கேரளா. பெரும்பாலும் இந்த தங்கங்கள் அரபுநாடுகளில் இருந்தே கடத்தி கொண்டு வரப்படும். சுங்கத்துறை சோதனைகளில் பெரும்பாலானவர்கள் மாட்டி கொள்வதும் உண்டு. தற்போது இம்மாதிரியான சம்பவங்கள் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் தான் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
துபாயில் இருந்து வாங்கிய எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்:
சென்னை சர்வதேச விமான நிலையமான மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை வந்தது. அந்த விமானத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி ஒருவரும் பயணித்துள்ளார். அதோடு அவர் குறிப்பாக துபாயில் இருந்து எலக்ட்ரிக் ரைஸ் குக்கரை வாங்கி வந்துள்ளார்.
குக்கரின் உள்ளே வட்டவடிவில் தங்கக்கட்டி:
இங்கு இல்லாத குக்கரா துபாயில் இருந்து வாங்கி வரவேண்டும் என சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர் வைத்திருந்த ரைஸ் குக்கரை திறந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது, அந்த குக்கரின் உள்ளே வட்டவடிவில் தங்கக்கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான நபர்:
சுமார் 300 கிராம் எடை கொண்ட கொண்ட அந்த தங்க கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த 300 கிராம் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.13.70 லட்சம் எனகே கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
மேலும், இதுபோல, சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததில் சென்னையை சேர்ந்த ஆண் பயணி தனது உள்ளாடைக்குள் 290 கிராம் தங்க பசையை மறைத்து வைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பும் சுமார் ரூ.13.5 லட்சம் என கூறப்படுகிறது.மதிப்பு தங்கத்தை கைப்பற்றினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்.. ரிசர்வேஷனில் ஏறிய பெண்.. நள்ளிரவில் பொது பெட்டிக்கு மாறிய போது விபரீதம்!
- ‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!
- சென்னையில் வண்ணாரப்பேட்டை பக்கம் போனீங்களா.. அந்த அழகான மாற்றத்தை கவனிச்சீங்களா!
- சென்னையில் Live in together-ல் வாழ்ந்த காதலர்கள்.. திடீரென வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சி சம்பவம்..!
- காசிமேடு மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரூ.1 கோடி மதிப்பிலான மீன்.. அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?
- சென்னைக்கு குட் நியூஸ்.. ரெடியாகும் மிகப் பெரிய திட்டம்.. அரசு அதிரடி உத்தரவு..!
- "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்".. ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.. CCTV-யில் சிக்குன மருமகள்
- கால் டாக்ஸி ஓட்டுநர் கொலையில் திடீர் திருப்பம்.. சிக்கிய கணவன் - மனைவி.. பரபரப்பு வாக்குமூலம்
- என்கிட்டயே சவாலா- மெல்லிசாக ஊற்றி, அழகாக மடித்து.. மாஸ்டரிடம் தோசையை நீட்டிய அண்ணாமலை.. செம்ம கலகல!
- "இதுனால தான் சென்னை BJP ஆபிஸ்ல பெட்ரோல் குண்டு போட்டேன்" .. குற்றவாளி சொன்ன பகீர் காரணம்..!